2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர். மதுரா சிவகுமார்
Born: 29 OCT 1997 – Death: 01 DEC 2016

டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியிரண்டும் காயவில்லை
இமைப்பொழுதும் தூங்கவில்லை
மருத்துவர் என்ற கொடியவள் செய்த
கொடுமையின் வயதோ இரண்டு!
ஏன் மதுரா நீயின்னும்
தேன் குரல் அழைப்போடு
மானெனப் பாய்ந்து- உன்
வீடு திரும்பவில்லை?
மாரியும், கோடையும், வசந்தமும்
மாறி மாறி வந்தபடி!
பாவியர் எம் முகத்தில் தான்
இன்னும் வசந்தமில்லை!
வா மதுரா, வா!
துயரில் துவண்டிருக்கும்
நாம் வாழ்வினைத்
தூக்கி நிறுத்த வேண்டுமாயின்
நீ மீண்டும் வர வேண்டும்!!
உன் காலடியோசைக்காக
கண்ணீரை ஏந்தியபடி
காத்திருக்கிறோம் கண்மணியே மதுரா!
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
நீ தானே எங்கள் சந்நிதி
நீ இன்றி எமக்கேது நின்மதி!
தகவல்: குடும்பத்தினர்
1,571 total views